வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தேமுதிக எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் காயம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப் போனபோது மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தேமுதிக எம்.எல்.ஏ. பாபு முருகவேல் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஆரணி ஒன்றியத்தில் தேமுதிக எம்எல்ஏ பாபுமுருகவேல் கடந்த 2 நாள்களாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அவர் அக்ராபாளையம், அரியப்பாடி, மேலேரி, அடையபுலம், சேவூர், ரகுநாதபுரம் உள்ளிட்ட கிராம வாக்காளர்களுக்கு மினிவேனில் சென்று நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ரகுநாதபுரத்திலிருந்து வரும் வழியில் ரகுநாதபுரம் ஏரிக்கரையில் சென்றபோது திடீரென மினிவேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் எம்.எல்.ஏ. பாபுமுருகவேல் சிறுகாயத்துடன் தப்பினார். உடன் சென்ற அதிமுக பேரவை மாவட்ட செயலர் எஸ்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி நாராயணசாமி, தேமுதிக ஒன்றிய அவைத்தலைவர் சி.எம்.ஆர். ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் லோகநாதன், எம்எல்ஏ உதவியாளர் ராம்சங்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த திடீர் விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications