'முடிஞ்சது லீவு'... உற்சாகமாய் மீன்களை அள்ளி வந்த மீனவர்கள்!

தமிழக கடலில் மீன்கள் இனப்பெருக்கம் அடைவதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை 45 நாட்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தடை காலம் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் தடை காலம் முடிவடைகிறது.
இதையொட்டி சென்னை மீனவர்கள் தடை காலம் முடிந்ததையொட்டி சென்னை புதுச்சேரி மீனவர்கள் நேற்று நள்ளிரவே விசைபடகு, பைபர், கட்டு மரங்களில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
காசிமேடு துறைமுகத்தில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். விசைப் படகுகளில் கடலுக்குள் செல்பவர்கள் மீன் பிடித்து திரும்பி வர சுமார் 5 அல்லது 6 நாட்கள் ஆகும். பைபர், கட்டு மரத்தில் செல்பவர் ஓரிரு நாட்களிலேயே திரும்பி வந்துவிடுவர்.
இன்று காலை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கட்டுமரத்தில் சென்ற மீனவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் அதிக அளவு பெரிய அளவிலான மீன்கள் பிடித்து வந்திருந்தனர். கெளுத்தி, இறால், டைகர் எறால், பாறைமீன், சங்கரா, சீலா, நெத்திலி 6 அடி உயரம் உள்ள முள்வாளை உள்ளிட்ட மீன்கள் அதிகம் இருந்தன. இவற்றைப் பார்த்து மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, "தடை காலம் முடிந்து கடலுக்குள் சென்றபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களது வலையில் வழக்கத்தை விட பெரிய மீன்கள் அதிக அளவு சிக்கியது. எங்களால் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாது. எனவே ஒரேநாளில் நாங்கள் திரும்பி வந்து விட்டோம்.
விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரும்போது மிகப்பெரிய மீன்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.
தடை காலங்களில் மீன்விலை ரூ.300 முதல் 600 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பி வந்துள்ளதால் மீன்வரத்து அதிகரித்துள்ளது.
விசைப்படகு மீனவர்கள் திரும்பி வந்ததும் மீன்வரத்து மேலும் அதிகரிக்கும். இதைத்தொடர்ந்து மீன்விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications