அதிமுக அரசை விமர்சித்து தூத்துக்குடியில் மதிமுக போஸ்டர்
தூத்துக்குடி : அதிமுக அரசின் ஒரு வார கால ஆட்சியை கிண்டலடித்தும், விமர்சித்தும் மதிமுக பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
அதிமுகவின் சர்வாதிகார போக்கு தொடங்கியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள்ளாகவே, ஒரு சர்வாதிகார ஆட்சிதான் கொடுப்பேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சட்டசபை இடமாற்றம், சமச்சீர் கல்வி ரத்து என்று ஆயிரக்கோடி ரூபாயான மக்களின் வரிப்பணத்தை இன்றைக்கு பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம் என்றார் அவர்.
அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம் வருமாறு:
அதிமுக அரசின் ஒரு வார சா(சோ)தனைகள்
சட்டசபை இடமாற்றம்
-ரூபாய் 1100 கோடி நஷ்டம்
சமச்சீர் கல்வி திட்டம் ரத்து
- ரூபாய் 500 கோடி இழப்பு
ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை
-சட்டம், ஒழுங்கு-சந்தி சிரிப்பு
சட்ட, மேல்-சபை முடக்கம்
- சர்வாதிகார ஆட்சியின் துவக்கம்
இவ்வாறு அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. வைகோவின் படம் போட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர்கள் கட்சி மேலிடத்தின் அனுமதியோடு வெளியிடப்பட்டதா அல்லது தன்னிச்சையாக வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது மதிமுக மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications