கேரள பல்கலை. உதவியாளர் தேர்வில் 40 ஆயிரம் விடைத்தாள்கள் மாயம்: குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழக உதவியாளர் பணிக்கான தேர்வில் 40 ஆயிரம் விடைத்தாள்கள் மாயமானது. இது பற்றி குற்றப்பிரிவு போலீ்ஸ் விசாரணைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு கேரள பல்கலைக்கழக உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். பின்னர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஜித் என்பவர் லோக் ஆயுக்தாவில் ஒரு வழக்கு தொடர்ந்தார். பணி நியமனம் செய்யப்பட்ட 200 பேரில் 180 பேர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த லோக் ஆயுக்தா தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 40 ஆயிரம் விடைத்தாள்கள் மாயமானது தெரிய வந்தது. இதனால் பணி நியமனங்களை ரத்து செய்ய லோக் ஆயுக்தா உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விடைத்தாள் மாயமானது பற்றி விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு நியமித்த விசாரணை கமிஷனாலும், மாயமான விடைத்தாள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து விடைத்தாள் மாயம் பற்றி குற்றபிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு விசாரணை கமிஷன் சிபாரிசு செய்தது. இந்நிலையில் விடைத்தாள்கள் மாயமானது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications