ஒரு வாரத்தில் மணல் விலை குறையும்: பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தகவல்
ஈரோடு: இடைத்தரகர்கள் இன்றி பொதுப்பணித்துறை நேரடியாக மணல் விற்பனை செய்ய உள்ளதால், ஒரு வாரத்தில் மணல் விலை குறையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பணித்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு ராமலிங்கம் முதன்முறையாக ஈரோடு வந்தார். அங்கு அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
என் துறையில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் டன் மணல் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்துள்ளது.
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்துள்ளது. இனியும் முறைகேடு நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி, இடைத்தரகர்கள் இன்றி பொதுப்பணித்துறை நேரடியாக மணல் விற்பனை செய்ய உள்ளது. இதனால் ஒரு வாரத்தில் மணல் விலை குறையும்.
முல்லை பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அணை உறுதியாக உள்ளது. அதன் ஆய்வுக் குழுவில் தமிழகத்தின் நிலையை அதிகாரிகள் எடுத்துக் கூறுவர். புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவை, தமிழகம் ஏற்காது.
காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்கு, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதன் முறையாக வரலாற்று சாதனையாக, ஜூன் 12-ம் தேதிக்கு பதில் ஜூன் 6-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, காவிரி நீர் கடைமடைக்கும் செல்லும் வகையில், கூடுதலாக நீர் திறக்கப்படும்.
காவிரி ஆறு செல்லும் பாசன வாய்க்கால்களில் தூர்வாரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பணி, ஜூன் 5-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
ஈரோடு பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களில் சாய, தோல் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். அதற்கான நடவடிக்கையை தற்போது துவக்கியுள்ளோம்.
தமிழகத்தில் பவானிசாகர் அணையை கட்டியவரும், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவராகவும் உள்ள மோகனகிருஷ்ணனை, தமிழக அரசு சார்பில் கவுரவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications