நூற்பாலைகளின் போராட்டத்தினால் ரூ.736 கோடி நூல் உற்பத்தி பாதிப்பு
திருப்பூர்: நூற்பாலைகளின் ஒரு 'ஷிப்ட்" உற்பத்தி நிறுத்தத்தின் காரணமாக ரூ.736 கோடி மதிப்பிலான நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
மத்திய அரசு பருத்தி நூல் ஏற்றுமதிக்கு வழங்கிய சலுகைகள் மீண்டும் தொடரப்படவேண்டும். நூலுக்கான கலால் வரி ரத்து செய்யப்பட வேண்டும் என நாடு முழுவதிலும் உள்ள நூற்பாலைகள் போராட்டத்தில் இறங்கின. கடந்த 23ம் தேதி அடையாள உற்பத்தி போராட்டம் நடத்தப்பட்டது. அன்று ஓரே நாளில் 1.2 கோடி நூல் உற்பத்தி பாதித்தது.
ஒரு 'ஷிப்ட்" நிறுத்த போராட்டம்
அதனைத் தொடர்ந்து ஒரு 'ஷிப்ட்" நிறுத்த போராட்டத்தினை நூற்பாலைகள் துவங்கின. 24ம் தேதி முதல் 31ம் தேதிவரை அறிவிக்கப்பட்ட இந்த போராட்டத்தினால், தினமும் 92 கோடி ரூபாய் மதிப்பிலான நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு தினங்களில் சுமார் 3.20 கோடி கிலோ நூல் உற்பத்தி தடைபட்டுள்ளது.
அடுத்த கட்ட முடிவு
நூற்பாலைகளின் இந்த போராட்டத்தினை மத்திய அரசு கண்டு கொள்ளாததால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து நூற்பாலைகள் சங்க நிர்வாகிகள் விரைவில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications