அஸ்ஸாம்: பாலத்திலிருந்து பஸ் ஆற்றில் விழுந்து 31 பேர் பலி
கெளஹாத்தி: அஸ்ஸாமில் நடந்த இரு வேறு விபத்துகளில் 37 பேர் பலியாயினர்.
தலைநகர் கெளஹாத்தியிலிருந்து ராங்கியா மாவட்டம் திகு என்ற இடத்துக்கு நேற்றிரவு திருமண கோஷ்டியினர் 40 பேர் பஸ்சில் சென்றனர். ஒரு மரப் பாலத்தை பஸ் கடக்க முயன்ற போது, அந்தப் பாலம் உடைந்ததில் பஸ் 40 அடி ஆழ குளத்தில் விழுந்து மூழ்கியது.
தகவல் கிடைத்ததும் போலீசாரும், ராணுவ வீரர்களும் விரைந்து வந்தனர்.
இரவு நேரம் என்பதால் பஸ்சை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. விடிய விடிய போராடி பஸ்சை மீட்டனர். இதில் 31 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 12 பேர் பெண்கள்.
மணமகன், அவரது பெற்றோரும் விபத்தில் இறந்து விட்டனர், 6 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் நடந்த விபத்தில் 12 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே பொக்காகட் எனும் பகுதியில் பஸ்சும்- ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டன. இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது. தரையில் கொட்டிய எண்ணையை பொதுமக்கள் சேகரித்தபோது டேங்கர் திடீரென வெடித்து தீ பிடித்தது. இதில் 5 பேர் உடல் கருகி இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications