29 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள், 9 பேர் பெண்கள்: சகாயம் தொடர்ந்து மதுரையில்..

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: (அடைப்புக் குறிக்குள் முன்பு வகித்த பதவி)
1. அனு ஜார்ஜ் (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்)-அரியலூர் கலெக்டர்
2. எம்.கருணாகரன் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் நிர்வாக இயக்குனர்)-கோவை கலெக்டர்
3. வி.அமுதவல்லி (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்)-கடலூர் கலெக்டர் 4. ஆர்.லில்லி (நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணை கமிஷனர்)-தர்மபுரி கலெக்டர்
5. கே.நாகராஜன் (வருவாய் நிர்வாக துறை இணை கமிஷனர்-பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை)-திண்டுக்கல் கலெக்டர்
6. ஆர்.ஆனந்தகுமார் (தர்மபுரி கலெக்டர்)-ஈரோடு கலெக்டர்
7. எஸ்.சிவசண்முக ராஜா (மரபு சார் துறை துணை செயலாளர்)-காஞ்சீபுரம் கலெக்டர்
8. ஆஷிஷ் குமார் (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்-சுகாதாரம்)-கன்னியாகுமரி கலெக்டர்
9. வி.ஷோபனா (சென்னை கலெக்டர்)-கரூர் கலெக்டர்
10. சி.என்.மகேஸ்வரன் (தூத்துக்குடி கலெக்டர்)-கிருஷ்ணகிரி கலெக்டர்
11. டி.முனுசாமி (நில நிர்வாக துறை இணை கமிஷனர்-நிலம்)-நாகப்பட்டினம் கலெக்டர்
12. ஜெ.குமரகுருபரன் (வணிக வரித்துறை இணை கமிஷனர்)-நாமக்கல் கலெக்டர்
13. தாரேஸ் அகமது (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்-பணிகள்)-பெரம்பலூர் கலெக்டர்
14. பி.மகேஸ்வரி (அம்பத்தூர் மாநகராட்சி கமிஷனர்)-புதுக்கோட்டை கலெக்டர்
15. வி.அருண்ராய் (கிருஷ்ணகிரி கலெக்டர்)-ராமநாதபுரம் கலெக்டர்
16. கே.மகரபூஷணம் (சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குனர்)-சேலம் கலெக்டர்
17. வி.சாந்தா (வணிக வரித்துறை இணை கமிஷனர்)-சிவகங்கை கலெக்டர்
18. கே.பாஸ்கரன் (திருவாரூர் கலெக்டர்)-தஞ்சாவூர் கலெக்டர்
19. கே.எஸ்.பழனிசாமி (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணை செயலாளர்)-தேனி கலெக்டர்
20. ஆர்.செல்வராஜ் (மாநில தகவல் ஆணைய செயலாளர்)-தூத்துக்குடி கலெக்டர்
21. ஜெயஸ்ரீ முரளிதரன் (உள்துறை இணை செயலாளர்)-திருச்சி கலெக்டர்
22. எஸ்.நடராஜன் (சிப்காட் செயல் இயக்குனர்)-திருநெல்வேலி கலெக்டர் 23. எம்.மதிவாணன் (சர்க்கரை துறை கூடுதல் கமிஷனர்)-திருப்பூர் கலெக்டர் 24. ஆஷிஷ் சட்டர்ஜி (காஞ்சீபுரம் கலெக்டர்)-திருவள்ளூர் கலெக்டர்
25. அன்சுல் மிஸ்ரா (கோவை மாநகராட்சி கமிஷனர்)-திருவண்ணாமலை கலெக்டர் 26. சி.முனியநாதன் (நாகப்பட்டினம் கலெக்டர்)-திருவாரூர் கலெக்டர்
27. எஸ்.நாகராஜன் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர்)-வேலூர் கலெக்டர்
28. சி.டி.மணிமேகலை (மாற்றுத் திறனாளிகள் துறை கமிஷனர்)-விழுப்புரம் கலெக்டர்
29. எம்.பாலாஜி (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்-கல்வி)-விருதுநகர் கலெக்டர்
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் மதுரை கலெக்டர் சகாயமும், நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கும் மாற்றப்படவில்லை. அதே போல சென்னை மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் கலெக்டர் நியமிக்கப்படவில்லை.
சட்டமன்றத் தேர்தலின்போது மதுரை மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அமைச்சர் அழகிரி தரப்பை ஒடுக்கினார் சகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications