லோக்பால் சட்டம்: 'வேண்டுமா?, வழங்கலாமா?'-முதல்வர்களிடம் 'ஐடியா' கேட்கும் மத்திய அரசு

பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் ஊழல் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அன்னா ஹசாரே தலைமையிலான சிவில் சொசைட்டி குழுவினருக்கும், லோக் பால் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒருமனதான கருத்து எட்டப்படவில்லை.
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் குழு நடத்திய ஆலோசனைகளில் ஒருமனதான முடிவு எட்டப்படவில்லை. அதே நேரத்தில் லோக்பால் மசோதா ஜூன் 30ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். வரும் மழைக்கால கூட்டத் தொடரில் ஊழலுக்கு எதிரான கடுமையான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.
அதே நேரத்தில் இந்த மசோதா தொடர்பாக 6 முக்கிய விஷயங்களில் மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தைக் கேட்டு லோக்பால் வரைவுக் குழு தலைவரும் மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 1. ஊழலை விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா அமைக்கப்பட வேண்டுமா?, 2. லோக்பால் மசோதா விசாரணை வரம்பில் பிரதமரையும் கொண்டு வரலாமா?, 3. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிக்க அனுமதி வழங்கலாமா?, 4. நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் நடந்து கொள்வது (பேசுவது, வாக்களிப்பது உள்ளிட்டவை) ஆகியவற்றையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாமா?, 5. சமூக சேவகர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாமா?, 6. லோக்பால் என்பதற்கு வரையறை என்ன? லோக்பாலுக்கு அனைத்து அதிகாரத்தையும் வழங்கிவிடுவதா அல்லது அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த 6 விஷயங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு முதல்வர்களும், கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
லோக்பால் வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூன் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு முதல்வர்களிடமும், கட்சித் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சிதம்பரமும், கபில் சிபலும் கூறினர்.
இந் நிலையில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டதற்கு, இது குறித்து நான் கருத்துக் கூற வேண்டியதில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து தொடர்பான விஷயமும் இல்லை என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications