கோவை காப்பகத்தில் 4 குழந்தைகள் மாயம்
கோவை: கோவையிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 4 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.
காப்பகம்
அனாதை குழந்தைகளை மீட்டு பராமரிக்கும் 'குழந்தைகள் குடும்பம்" எனும் காப்பகம் கோவை போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் எங்கே?!
திருப்பூரில் அனாதையாகச் சுற்றித் திரிந்த முத்துப்பாண்டி, சொக்கான், புவனா மற்றும் ஜோதி ஆகிய குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர். கடந்த 24ம்தேதி இக்குழந்தைகள் 'குழந்தைகள் குடும்பம்" காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் மட்டுமே காப்பகத்தில் தங்கி இருந்த அக்குழந்தைகள் கடந்த 26ம்தேதி முதல் மாயமாகி விட்டனர்.
தேடல் துவங்கியது
காப்பக நிர்வாகிகள் குழந்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications