சிங்கள ராணுவத்தின் கோரத்தைக் காட்டும் வீடியோ-விரைவில் வெளியிடுகிறார் வைகோ
சென்னை: ஈழப் போரின்போது சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத்தின் கோரத்தை அம்பலபப்டுத்தும் மிகக் கொடூரமான, கல் நெஞ்சையும் கரைக்க வைக்கும் வகையிலான வீடியோ காட்சி ஒன்று சிடி வடிவில் விரைவில் வெளியிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த மதிமுக ஆண்டு விழாவின்போது இத்தகவலை அவர் வெளியிட்டார். அப்போது வைகோ பேசுகையில்,
நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன். ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4"ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன்.
ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும். 50 நிமிடங்கள் ஓடும் அந்த குறுந்தகடு. ஒரு வாரத்தில் வெளியிடப்போகிறேன். நான் தம்பிமார்களை, இளைஞர்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு கல்லூரி வாயில்களிலும் நின்று அந்த கல்லூரி முடிந்து வரும் பிள்ளைகளிடம் கொடுங்கள். அதில் நான் மதிமுகவைச் சொல்லவில்லை. பம்பரம் சின்னத்தைக் காட்டவில்லை. கட்சிக்கொடியை காட்டவில்லை.
நிலைமை என்னவென்று மாணவ, மாணவிகளுக்கு தெரியவேண்டும். அவர்கள் அந்த குறுந்தகட்டை வீடுகளுக்கு எடுத்துச்சென்று எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும். அன்று இரவு சாப்பிடமுடியாது; அன்று இரவு தூங்கமுடியாது. என்னாலேயே இரண்டாவது முறை அந்த குறுந்தகட்டை பார்க்க முடியவில்லை.
குண்டு பாய்ந்திருக்கிறது ஒரு தாய்க்கு. குண்டு பாய்ந்ததின் விளைவாக அந்த குண்டு முதுகு பக்கமாக வெளியேறியிருக்கிறது. அப்போது இதயமும், நுரையீரலும் ரத்தில் துடிப்பது அந்த குறுந்தகட்டில் இருக்கிறது. அப்படிச்சாகிறாள். அதைப்பார்த்தால் சாப்பிடமுடியாது; தூங்க முடியாது. பச்சைக்குழந்தைகள் எப்போது குண்டு வீசுவார்கள் என்று பயந்து பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா! அவர்கள் புலிகளா.
இசைப்பிரியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாளே. அவளை எப்படி கற்பழித்தோம் என்பதை சிங்கள மொழியில் பேசி செல்போனில் பதிவு செய்திருக்கானுங்க. இத்தனையும் தாங்கிய குறுந்தகட்டை வெளியிடுகிறேன் என்றார் வைகோ.
பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடுகளின் எம்.பிக்கள் கூட்டத்தில் ஈழப் படுகொலைகள் குறித்து விளக்குவதற்காக தற்போது அங்கு சென்றுள்ளார் வைகோ என்பது நினைவிருக்கலாம். அந்த கூட்டத்தின்போதும் இந்த வீடியோக் காட்சியை வைகோ வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications