தர்மபுரி அருகே அரசு நீச்சல்குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே அரசு நீச்சல் குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் அரசு நீச்சல் குளம் உள்ளது. இங்கு குளிக்க வரும் சிறுவர்களிடம் ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நீச்சல் குளத்தில் குளிக்க வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கவும், குளிக்கும் மாணவர்களை கண்காணிக்கவும் முருகன் என்ற தற்காப்பு அலுவலரும், நீரை வெளியேற்றி பராமரிக்க கோவிந்தராஜ் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 50-க்கும் அதிகமான மாணவிகள் நீ்ச்சல் குளத்தில் நீ்குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது குளத்திற்குள் யாரோ இறந்து கிடப்பதைப் பார்த்த மாணவிகள் பயந்துபோய் வெளியில் ஓடினர்.
இது குறித்து தர்மபுரி நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்ணீரில் முழ்கியிருந்த இரண்டு மாணவிகளின் சடலங்களை மீட்டனர்.
போலீசாரின் விசாரணையில் இறந்து போனது வி. ஜெட்டிஹள்ளியைச் சேர்ந்த மாது என்பவரின் மகள் விமலா என்பதும், திருப்பதியின் மகள் மீனா என்பதும் தெரிய வந்தது. மாணவிகள் இருவரும் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
அஜாக்கிரதையாக இருந்த நீச்சல் குள ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications