மகன் பிரிவை தாங்க முடியாத தாய், மகன் சமாதியில் தற்கொலை
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே மகன் இறந்த தூக்கத்தை தாங்க முடியாமல் அவரது சமாதியில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியர்குடியிருப்பை சேர்ந்தவர் மீன் வியாபாரி சேர்மத்துரை. இவரது மனைவி தங்ககனி. இவர்களது மகன் பிரபாகர். ஈரோட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த பிரபாகர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
மகனை பறிகொடுத்த தங்ககனி அவன் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என்று புலம்பிய வண்ணம் இருந்தார். கணவர், உறவினர்கள் தேற்றியும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
முன்தினம் மதியம் மண்ணெண்ணெய் கேனுடன் பிரபாகர் அடக்கம் செய்துள்ள தோட்டத்திற்கு தங்ககனி சென்றார். அங்கு மகன் சமாதியை கட்டி பிடித்து கதறி அழுதார்.
பின்னர் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று தங்ககனி உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications