ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன்-சன் டிவி நிறுவன ஷேர்களில் பெரும் சரிவு!

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ள மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்திதற்கு சலுகை காட்டியதாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாக்ஸிஸ் நிறுவனம் கலாநிதி மாறன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால், மாக்ஸிஸுக்கு தயாநிதி மாறன் சலுகை காட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிபிஐ பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி விட்டது. விரைவில் தயாநிதி மாறனையும் சிபிஐ விசாரிக்கவுள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிறுவன பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் 31 சதவீத சரிவை சன் நிறுவன பங்குகள் சந்தித்துள்ளன.
சன் டிவி தவிர, கலாநிதி மாறனின் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன. சன் நிறுவன பங்குகள் 31.1 சதவீதமும், ஸ்பைஸ்ஜெட் 13.5 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன.
சிபிஐ விசாரணை வரப் போகிறது என்ற செய்திகள் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனால் அவர்கள் பங்குகளை விற்க குவிந்ததால் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தக நிபுணர் சுரேஷ் பர்மார் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications