திமுக ஆட்சி அமல்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து-ஆளுநர்
சென்னை: திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா அறிக்கையில் இதுகுறித்து மேலும் கூறப்பட்டிருப்பதாவது...
- கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே அந்தத் திட்டம் கைவிடப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம்:
- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.
- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.
- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
10ம் தேதி வரை சட்டசபைக் கூட்டம்:
ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடியது. அப்போது கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜெயக்குமார் கூறுகையில்,
வரும் 6ம் தேதி அமைச்சர் மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்த 4 நாட்கள் தொடர்ந்து கூட்டம் நடைபெறும். அந்த நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடர் நிறைவுறும். 10ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்துவார் என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications