ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன்லால் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஹிஸார்: ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன்லால் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 81.
முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார் பஜன்லால். பின்னர் தனியாக பிரிந்து வந்து ஹரியானா ஜான்ஹித் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஹிஸ்ஸாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களில் ஒருவரான குல்தீப் பிஷ்னாய் ஹரியானா ஜான்ஹித் கட்சியின் தலைவராக இருக்கிறார், எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இன்னொரு மகன் சந்தர் மோகன் முன்னாள் அமைச்சர் ஆவார்.












Click it and Unblock the Notifications