திமுக பிரமுகரின் ஹோட்டலில் மது பாட்டில்கள் பறிமுதல்-7 பேர் கைது-எஸ்.பி அதிரடி
கரூர் : கரூரில் திமுக நகர நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கரூரில் திமுக நகர நிர்வாகி ஒருவருக்கு பல்வேறு இடங்களில் ஹோட்டல்கள் இருந்து வருகின்றது. இந்த ஹோட்டலில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்கள் இரவு விற்பனை செய்து செய்து வருவதாக ரகசிய தகவல் கரூர் எஸ்.பி மோகனுக்கு கிடைத்தது.
இதனையடுத்து கரூர் எஸ்.பி மோகன் கரூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்ததை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதனையடுத்து, மது விற்பனை செய்த ஹோட்டல் ஊழியர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கரூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications