அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தங்கை மகேஸ்வரி. இவர்
சென்னை அசோக்நகரில் இசக்கி சுப்பையா குடும்பத்துடன் வசிக்கிறார்.
மகேஸ்வரியும், அண்ணன் வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். இவரது கணவர் திருமலைகுமார் கட்டட ஒப்பந்ததாரர் ஆவார்.
இவர்களது இளைய மகள் ராஜேஸ்வரி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இவர் திருவொற்றியூர் இரும்பு வியாபாரி முருகேசனின் மகன் சுரேந்தரை காதலித்து வந்தார். சுரேந்தரும் அதே பல்கலைக்கழகத்தில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு
இரு குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் சுரேந்தர் ராஜேஸ்வரியுடன் மதுரை வந்தார். அங்கு தனது உறவினர், நண்பர் உதவியுடன் மாநகராட்சி பூங்கா முருகன் கோவிலில் திருமணம்
செய்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் தரப்பிலிருந்து பிரச்சனை வரும் என்று பயந்து பாதுகாப்பு கேட்டு மதுரை போலீஸ் கமிஷனர் சந்தீப் மிட்டலிடம் தஞ்சமடைந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications