கள்ளக்காதல் தகறாறு - வாணியம்பாடி அருகே திமுக நிர்வாகி படுகொலை
வேலூர் : கள்ளக்காதல் தகராறில் வேலூர் மாவட்ட திமுக பிரதிநிதி கமலகண்ணன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டையை சேர்ந்தவர் கமலகண்ணன் (47), இவர் திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.
இவர் நேற்று நள்ளிரவு சிவசக்திநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவரை திடீரென வழிமறித்த ஒரு மர்ம கும்பல் கத்தி, அரிவாள்களால் வெட்டி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டது. அதே இடத்தில் கமலகண்ணன் சரிந்து விழுந்து பலியானார்.
இரவு முழுவதும் ரோட்டில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட பொது மக்கள் இது குறித்து வாணியம்பாடி டி.எஸ்.பி. அப்துல்லா, டவுன் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசாருககு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது கமலக்கண்ணன் குடல் சரிந்து கிடந்தது. மேலும் கால், கழுத்து, கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது. ஆனால், அவர் அணிந்திருந்த தங்க செயின், பிரஸ்லெட், மோதிரம் ஆகியவையும் அப்படியே இருந்தது. அவரது இரண்டு சக்கர வானம் மட்டும் காணாமல் போயிருந்தது.
கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ரத்தங்கள் சிந்தியுள்ளது. சாலையோரம் கோடு போட்டது போல ரத்தம் உறைந்து கிடந்தது.
இதந் கொலை குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணத்தை விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் கமலகண்ணனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டி சாய்த்துள்ள்ளதாகவும், இந்த கொலையில் இரண்டு பேருக்கும் மேற்பட்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
கமலக்கண்ணனுக்கும் சிவசக்தி நகரை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications