காஷ்மீரியுடன் தாலிபான் தலைவர் அமீர் அம்சாவும் கொல்லப்பட்டார்
இஸ்லாமாபாத்: கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி மட்டுமல்லாது தாலிபான் படைத்தளபதி அமீர் அம்சாவும் கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெற்கு வஜீரிஸதான் பழங்குடியினப் பகுதியில், வானா நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள லாமான் கிராமத்தில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி, தாலிபான் படைத்தளபதி அமீர் அம்சா உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.
மறுநாள் காலையில் இறந்தவர்களின் உடல்கள் ஆப்பிள் தோட்டத்தில் கிடந்துள்ளது. அதை உள்ளூர் மக்கள் புதைத்துள்ளனர்.
வானாவைச் சோர்ந்த அமீர் அம்சா தாலிபான் இயக்கத்தில் முல்லா நசீர் தலைமையிலான படையின் தளபதியாக இருந்து வந்துள்ளார்.
முல்லா நசீருக்கும் அரசுக்கும் இடையே தொடர்பு உண்டு. பஞ்சாபி தாலிபான் வீரர்கள் முல்லா நசீர் கட்டுப்பாட்டில் உள்ள வானா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளி்ல் வசிப்பதாக நம்பப்படுகிறது.
அமெரிக்கா வரும் ஜூலை மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது படைகளைத் திரும்பப்பெறுவதால் அதற்குள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அழிக்குமாறு அந்நாட்டுக்கு கெடுவிதித்துள்ளது. அமெரிக்கா கொடுத்துள்ள பட்டியலில் காஷ்மீரி, முல்லா உமர், அய்மான் அல் ஜவாஹிரி, சிராஜுத்தீன் ஹக்கானி மற்றும் அதியா அப்துல் ரஹ்மான் ஆகியோர் பெயர்கள் உள்ளன.
இந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக செயல்படுவதாகக் கூறப்படுகின்து.
கைபர் பழங்குடியினப் பகுதியில் இருந்து காஷ்மீரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அன்மையில் தான் வஜீரிஸ்தான் வந்ததாகக் கூறப்படுகின்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications