மு.க.அழகிரியின் வீட்டில் கல்வீசித் தாக்கிய அதிமுக பிரமுகர் கைது
மதுரை: மதுரையில் உள்ள மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகரை வீட்டுக் காவலாளி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். அவரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை டி.வி.எஸ். நகர் பகுதியில் அழகிரியின் வீடு உள்ளது. இன்று காலை மேலூர் கோர்ட்டில் ஆஜராவதற்காக அழகிரி போய் விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு வந்த ஒரு நபர் கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதைப் பார்த்த வீட்டு வாட்ச்மேன் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அந்த நபர் முதலில் இன்று காலையில் இன்னோவா காரில் அழகிரி வீட்டுக்கு வந்துள்ளார். வாட்ச்மேனை அணுகிய அவர் அழகிரியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை இப்போது பார்க்க முடியாது என்று வாட்ச்மேன் கூறியதால் திரும்பிப் போய் விட்டார். அதன் பின்னர் அழகிரி வீட்டை விட்டுக் கிளம்பிய பிறகு வந்த அவர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
விசாரணையில் அவரது பெயர் விஜயன் என்று தெரிய வந்தது. அதிமுகவைச் சேர்ந்தவராம். சூர்யா நகரில் வசித்து வருகிறார்.
நான் தீவிர அதிமுக விசுவாசி. அதனால்தான் அழகிரி வீட்டின் மீது கல்வீசினேன். வீடு மட்டுமல்ல ஏற்கனவே அவரது கல்யாண மண்டபத்தின் மீதும் வீசினேன். இதற்காக சிறைக்குப் போகவும் நான் தயார். அதற்கெல்லாம் கலங்க மாட்டேன் என்று கூறினாராம்.
இந்த சம்பவம் மதுரையி்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications