பிரதமரை மன்னித்து விட்டேன், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவேன்: ராம்தேவ்
ஹரித்வார்: பிரதமர் மன்மோகன் சிங்கை நான் மன்னித்து விட்டேன். ஊழல் ஒழிப்பு குறித்து மீண்டும் பேச விரும்பினால், மத்திய அரசு அழைத்தால் நான் கலந்து கொள்ளத் தயார் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஹரித்வாரில் தனது ஆசிரமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பிரதமரையும், மத்திய அரசையும், ராம்லீலா மைதான செயல்களுக்காக மன்னித்து விடுகிறேன். ஆனால் ஜனநாயகத்தை அவர்களை நான் மன்னிக்க முடியாது, மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
மீண்டும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கு நான் தயார். அவர்கள் என்னை அணுகினால் நான் பேசத் தயார். அது ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான பேச்சாக அமைய வேண்டும் என்றார் ராம்தேவ்.
நேற்றுதான் டெல்லி காவல்துறையின் அட்டகாசத்தை கடுமையாக குறை கூறிப் பேசியிருந்தார் ராம்தேவ். மேலும் தன்னைக் கொல்ல சதி நடந்ததாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு பிரதமரும், சோனியா காந்தியும்தான் காரணம் என்றும் அவர் கடுமையாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராம்தேவின் சொத்துக்கள் குறித்தும், அவருக்குச் சொந்தமானதாக கருதப்படும் 200 நிறுவனங்கள் குறித்தும் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் பிரதமரை மன்னித்து விட்டதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் ராம்தேவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications