சன் டிவிக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திடீர் உண்ணாவிரதம்

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் அருகில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் சகிலன் தாங்கினார். பொதுச் செயலாளர் கோகுல்தாஸ் மற்றும் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிர தப்போராட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் புதுப்பிக்கப்பட்டு ஆபரேட்டர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முன் அறிவிப்பின்றி சன் குழும சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
- கேபிள் உதவி ஆபரேட்டர்கள் 25 சதவீதம் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று சன் டி.வி. கூறுவதை வாபஸ் பெற வேண்டும்.
- தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கேபிள் டி.வி. ஒளிபரப்பை நிறுத்துவோம்.
- தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனங்களின் பிடியில் இருக்கும் கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகளை மீட்க வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வெற்றிக்கு இது முதல் வெற்றிப்படியாக அமையும்.
- தமிழக அரசு தொடங்க உள்ள கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். எதிராக சேனல்கள் கேரியர் தொகை அளித்தால் மட்டுமே அதனை ஒளிபரப்பவேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications