ஆப்ரிக்க நாடுகளில் கால்பதிக்கும் பிஸ்லெரி!
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை சந்தையில் அதிக பங்கை கொண்டது பிஸ்லரி நிறுவனம். இந்தியா தவிர இலங்கை, வங்க தேசம், ஓமன், யுஏஇ போன்ற நாடுகளிலும் இதற்கு கிளைகள் உள்ளன.
இப்போது வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிக தொழிற்சாலைகளை நிறுவ பிஸ்லரி திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச தலைவர் ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த நாடுகளில் அடுத்து தொழிற்சாலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
பிஸ்லரிக்கு மொத்தம் 17 சொந்த தொழிற்சாலைகளும், 33 கூட்டுத் தொழிற்சாலைகளும், பிஸ்லரிக்காக இயங்கும் உரிமம் பெற்ற 11 தொழிற்சாலைகளும் உள்ளன.












Click it and Unblock the Notifications