சிபிஐ இயக்குநரை பேச விடாமல் தடுத்த டி.ஆர்.பாலு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக ஜேபிசி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங், தயாநிதி மாறன் பெயரைக் கூறியபோது அதைச் சொல்லக் கூடாது என்று கூறி திமுகவைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர் டி.ஆர்.பாலு தடுத்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
டி.ஆர்.பாலுவின் இந்த குறுக்கீடால் சிபிஐ இயக்குநர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று ஜேபிசி முன்பு சிபிஐ இயக்குநர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது பாஜக ஆட்சிக்காலத்தில் இருந்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்கள் கடைப்பிடித்த கொள்கை உள்ளிட்டவற்றை அவர் கூறினார். அப்போது டி.ஆர்.பாலு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
ஆனால் தயாநிதி மாறன் பெயரை சிங் கூறியபோது குறுக்கிட்டுள்ளார் பாலு என்று தெரிகிறது. தயாநிதி மாறன் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என்று சற்று கோபத்துடன் கூறினாராம் பாலு.
இதனால் அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த பார்வையுடன் பாலுவைப் பார்த்துள்ளனர். சிங்கும் கூட பாலுவின் இந்த குறுக்கீடால் சற்று அதிருப்தி அடைந்தாராம்.
ஆனால் இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று பின்னர் குழுத் தலைவர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications