ஈழத்திற்கு எம்.எல்.ஏக்கள் குழுவை அனுப்ப டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை
சென்னை: போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்திற்கு தமிழக எம்.எல்.ஏக்கள் குழுவை அனுப்பி உண்மை நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டால்தான் அங்கு தமிழர்கள் உரிமையைப் பெற முடியும்.இலங்கையில் உள்ள நிலைமையை நேரில் கண்டறிய தமிழக எம்.எல்.ஏ.க்கள் குழுவை அனுப்ப வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை குறித்துப் பிரதமருக்கு தெரிவிக்க முடியும் என்றார்.
பாமக சார்பில் கலையரசன் பேசுகையில், தனி ஈழம்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது பா.ம.க.வின் நிலை. இந்தத் தீர்மானத்தை பா.ம.க. முழு மனதாக வரவேற்கிறது. முதல்வருக்கும், அரசுக்கும் வெகுவாக பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், பொருளாதாரத் தடை விதிப்பது மட்டுமின்றி இலங்கையுடன் தூதரக உறவுகளையும் துண்டிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications