இலங்கையில் சிக்கியுள்ள 4 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை-பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: மோசமான வானிலை காரணமாக தவறுதலாக இலங்கை கடற்பகுதிக்குள் போய் விட்ட நான்கு தமிழர்களை இலங்கை சிறையிலிருந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஜெயகுமார், பிரபாத், சுந்தர், மாரிமுத்து. இந்த நான்கு பேரும் இம்மாதம் 1ம் தேதி இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது பலத்த கடற்காற்று வீசியது. புயலில் சிக்கி படகு சேதமடைந்தது. கடலில் குதித்த அவர்கள் 8 மணி நேரம் நீந்தி, கடும் போராட்டத்துக்குப் பிறகு இலங்கைக் கடற்பகுதியான நைனாத் தீவுப் பகுதியில் கரை சேர்ந்தனர்.
அவர்கள் 3ம் தேதி கெயிட்ஸ் போலீஸ் சோதனைச் சாவடியில் பின்னர் சரணடைந்தனர். கெயிட்ஸ் போலீஸார் அவர்களைக் கைது செய்து முறைப்படி, ஜூன் 6ம் தேதி கெயிட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். ஜூன் 17ம் தேதிவரை அவர்கள் போலீஸ் காவலில் இருக்க அனுமதித்தது நீதிமன்றம்.
தமிழக மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினரும், ராமேஸ்வரம் மீனவர் அமைப்புகள் சிலவும் இந்த 4 பேரையும் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வருவது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதன் அடிப்படையில், இலங்கை அரசிடம் தகவல் அளித்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 4 மீனவர்களையும் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வர இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications