சென்னையில் காய்கறி விலை திடீர் உயர்வு!

சென்னையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காய்கறி விலை குறைந்து, அனைத்து காய்கறிகளும் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டன. தற்போது கோடை காலம் முடிந்து மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் அவ்வப்போது காற்றும் பலமாக வீசுகிறது.
இதனால் பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைந்ததால் மீண்டும் காய்கறி விலை ஏறத் தொடங்கி விட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீன்ஸ் கிலோ ரூ.16 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. ஆனால் இன்று கிலோ ரூ.50க்கு பீன்ஸ் விற்கப்பட்டது.
இதே போல் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதே போல் அவரைக்காய் கிலோ ரூ.14 முதல் ரூ.16 வரை கிடைத்து வந்தது. ஆனால் இன்று கிலோ ரூ.30க்கு உயர்ந்து விட்டது.
கேரட் ரூ.12-ல் இருந்து 14 ஆக விற்கப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.7-ல் இருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் வெண்டைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக விற்கப்படுகிறது. புடலங்காய் கிலோ ரூ.35-க்கு உயர்ந்துள்ளது.
வெளியூர்களில் இருந்து காய்கறி வருவது குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications