மோசடி வழக்கு: பிஷப் மாணிக்கம் துரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கோவை: கோவை சி.எஸ்.ஐ. அறக்கட்டளையில் நடைபெற்ற ரூ. 3.5 கோடி மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை உள்ளிட்ட 7 பேர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டல சி.எஸ்.ஐ. அறக்கட்டளை தலைவராக இருந்தவர் பிஷப் மாணிக்கம் துரை. இவர் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ. 3.5 கோடி மோசடி செய்ததாக உறுப்பினர் பிரகாஷ் என்பவர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பிஷப் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் பெற்றார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூர்த்தி, சண்முகசுந்தரம், மனேசன் உள்பட 7 பேர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், கடந்த மாதம் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சீனிவாசன் வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் மாணிக்கம் துரை உள்ளி்ட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications