பிரிட்டனில் எல்டிடிஇ கொடிக்குத் தடையில்லை!
லண்டன்: விடுதலைப் புலிகளின் கொடிக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்படவில்லை என்று அந்த அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.
பிரிட்டனின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் வட அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் போராட்டங்களில் காவல்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை அனைத்துவிதமான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்த வேண்டும். இதனை தமிழர் அமைப்புக்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் என அந்தக் குழு யோசனை தெரிவித்துள்ளது.
புலிகள் வேறு, மக்கள் வேறு. புலிக்கொடி தமிழர் கொடியல்ல. அது பிரிட்டனில் தடை செய்யப்பட்டுவிட்டது என தமிழர்கள் சிலரே தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இதனால் பிரிட்டனில் நடக்கும் போராட்டங்களில் புலிக்கொடியை காட்டுவதை தவிர்க்கத் தொடங்கினர்.
ஆனால் தடை செய்யப்பட்ட கொடியாக இருந்தால் அதனா பிபிசி உள்ளிட்ட ஊடகங்களில் அதைக் காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால் பிபிசி இந்தக் கொடியை தொலைக்காட்சிகளில் காட்டி வந்தது.
எனவே இந்தக் கொடி பிரிட்டனில் தடை செய்யப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனை விடுதலைப் புலிகள் தரப்பும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications