7வது நாள் உண்ணாவிரதம்-வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராம்தேவ்

கறுப்புப் பணத்துக்கு எதிராக டெல்லியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், பொது மக்களுடன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ராம்தேவை, அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டது.
இருப்பினும் அங்கும் அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இன்றுடன் 7வது நாளை எட்டியது ராம்தேவின் உண்ணாவிரதம். அவரது உடலை இன்றுப் பரிசோதித்த டாக்டர் யோகேஷ் சந்திர சர்மா கூறுகையில், ராம்தேவின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அவரது இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி வருகிறது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ராம்தேவுடன் 183 பேர் பதஞ்சலி ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் நிலையும் கவலைக்கிடமாகியுள்ளது என்றார்.
டாக்டர்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ராம்தேவ் பழச்சாறு, எலுமிச்சை சாதம், தேன் உள்ளிட்டவற்றை சாப்பிட ஆரம்பித்தார். ஆனாலும் அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று பகல் 3 மணிக்கு ஆசிரமத்துக்கு வந்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக டெஹ்ராடூன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆம்புலன்சிலயே அவருக்கு குளுக்கோஸ் ஏற்றிய மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இருப்பினும்
அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக அவரது சிஷ்யர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக ராம்தேவை சந்தித்து அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெற வைப்பதற்காக வாழும் கலை நிபுணர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஹரித்வார் விரைந்தார். உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனது போராட்டத்தை ராம்தேவ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க இருந்தார் ரவிசங்கர். ஆனால், இந்தச் சந்திப்பு நடப்பதற்குள்ளாகவே ராம்தேவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டது. இதையடுத்து ராம்தேவை அவர் மருத்துவமனையில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரினார்.
அதே போல ராம்தேவின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க மத்திய அரசு மனித நேய அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரேவும் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ராம்தேவ் ஆசிரம சொத்து மதிப்பு ரூ.1100 கோடி:
இதற்கிடையே ராம்தேவின் சொத்து மதிப்பு ரூ. 1100 கோடி என்று தெரிய வந்துள்ளது.
நேற்று அவரும் அவரது உதவியாளர் ஆச்சார்ய பால்கிருஷ்ணாவும் சேர்ந்து சொத்துக் கணக்கு என்று ஒன்றை அறிவித்தனர். முழுமையான சொத்துக் கணக்காக அது இல்லை. இருப்பினும் அவர்கள் சொன்ன கணக்குப்படி ராம்தேவின் சொத்து மதிப்பு ரூ.1100 என்று தெரிய வந்துள்ளது.
சொத்துக் கணக்கை வெளியிட்டுப் பேசிய ராம்தேவ் கூறுகையில்,நான் மோசடி செய்யவில்லை. பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. எனது சொத்துக்கள் வெளிப்படையானவை. அதை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றார் ராம்தேவ்.
ராம்தேவைத் தலைவராக கொண்ட பதஞ்சலி யோகபீடத்தின் கீழ் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன. இதன் மூலம் கிடைத்த வருமானமும் பலர் கொடுத்த நன்கொடை மூலமும் சொத்துகள் வந்துள்ளன.
அவற்றில் முக்கியமானவை பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளை, திவ்யா யோகா அறக்கட்டளை, வேதிக் பிராட்காஸ்ட் லிமிடெட், ஆஸ்த்தா தொலைக்காட்சி உள்ளிட்டவை அடங்கும்.
பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளை சார்பாக தயாரிக்கப்படும் பொருள்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அம்லா, ஆலோவேரா ஜூஸ் (பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட ஜூஸ்), இந்த இரண்டு பொருட்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு (2008-2009ம் ஆண்டு) ரூ. 25 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் மூலிகை பொருட்கள் தயாரித்தல், தைலம், அழகு சாதன பொருள்கள் அனைவராலும் விரும்பி வாங்கப்படுபவையாகும். பதஞ்சலி நிறுவனத்திற்கு சில்லறை வியாபாரிகள் மூலம் 95 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகள் (சர்வான்சாம்- சுனிதா) பெரும் பங்குதாரர்கள். இவர்கள் யோகா பீடத்திற்கு ஸ்காட்லாந்தில் ஒரு தீவை (900 ஏக்கர்) அன்பளிப்பாக வழங்கி உள்ளதாகவும், இந்த தீவில் யோகா மையம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications