ஸ்லீப்பர் கோச் ஆம்னி பஸ்கள்-ஆய்வு செய்கிறது காவல்துறை
காஞ்சிபுரம்: வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே நடந்த கோரமான சாலை விபத்தைத் தொடர்ந்து ஸ்லீப்பர் கோச்களைக் கொண்ட ஆம்னி பஸ்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது தமிழக காவல்துறை.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி சைலேந்திர பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், காவேரிப்பாக்கம் விபத்தில் சிக்கிய பேருந்தை முழுமையாகஆய்வு செய்யவுள்ளோம். தடயவியல் சோதனையும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இதுபோன்ற ஸ்லீப்பர் கோச் பஸ்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்படும்.
இதுபோன்ற பேருந்துகளில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற கோரமான விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காவேரிப்பாக்கம் விபத்தில் பயணிகளைக் காப்பாற்றுவதை விட்டு விட்டு முதல் ஆளாக டிரைவர் தப்பியுள்ளார். பயணிகள் பெரும் உயிர்ப் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவசர கால கதவுகளைத் திறக்க வேண்டிய பொறுப்பில் இருந்த டிரைவர் அதை தவற விட்டுள்ளார்.
டீசல் டேங்க் வெடித்ததும், ஏசி இயந்திரம் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததும் பஸ் முழுமையாக எரிந்து சாம்பலாக முக்கியக் காரணமாகி விட்டது என்றார் சைலேந்திர பாபு.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications