கேரளாவில் யானைகள் அட்டகாசம்: யானை மிதித்து ஒருவர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் மதம்கொண்ட யானை மிதித்ததில் ஒருவர் பலியானார். அவரது மகளுக்கு வரும் 12-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு இடநாட்டுக்கரையைச் சேர்ந்தவர் முஸ்தபா. நேற்று மாலை இவர் உப்புக்குளம என்ற இடத்தில் தனது மனைவி மரியாவுடன் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வனத்துறை அலுவலகம் அருகே சென்றபோது காட்டுக்குள் இருந்து கிளமபிய 9 யானைகள் ஊருக்குள் புகுந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் நீ்ண்ட நேரம் ஆகியும் காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே அட்டகாசம் செய்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கும்கி யானைகளை கொண்டு வர ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் அட்டகாசம் செய்த யானைகள் ரோட்டில் செல்பவர்களை தாக்கத் தொடங்கியது.
இதில் முஸ்தபா யானை கூட்டத்துக்கு இடையே மாட்டிக் கொண்டார். அவரை ஒரு யானை மிதித்து தூக்கி எறிந்தது. இதில் அவர் தனது மனைவி மரியா கண் முன்னாலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உப்புகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முஸ்தபா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த போன முஸ்தபாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிஸ்மி என்பவருக்கு வரும் 12-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications