உள்துறை செயலாளர் ஷீலாராணி திடீர் மாற்றம்-ரமேஷ்ராம் மிஸ்ரா நியமனம்

அவருக்குப் பதிலாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த ரமேஷ்ராம் மிஸ்ரா, உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷீலாராணிக்கு முக்கியத்துவம் இல்லாத தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பதவியைத் தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தான் நியமித்த அதிகாரியை 25 நாட்களில் ஜெயலலிதா மாற்றியுள்ளது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2001-06ம் ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியிலும் சுங்கத் உள்துறைச் செயலாளராக இருந்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் இவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை முதன்மைச் செயலாளர் பதவியைத் தந்தார். இப்போது டம்மி பதவிக்கு தூக்கியடித்துள்ளார்.
புதிய உள்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்ரா, முன்பு போக்குவரத்துத்துறைச் செயலாளராகவும், கவர்னரின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 64 டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்:
அதே போல தமிழகம் முழுவதும் 64 டி.எஸ்.பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சென்னையில் மட்டும் காத்திருப்போர் பட்டியலில் 19 அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக எம்.பி. ஜோதியின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்:
இந் நிலையில் அதிமுக முன்னாள் எம்.பியான என்.ஜோதிக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்த ஜோதிக்கு அப்போதைய அதிமுக ஆட்சி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. பின்னர் அவர் கட்சி மாறி திமுகவுக்கு வந்தார். இதையடுத்து அவருக்கு அப்போதைய திமுக அரசும் போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்தது.
இந் நிலையில் இப்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் ஆஜரானதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது ஆட்சியில் 2004ம் ஆண்டில் இருந்து எனக்கு ஒய் பிளஸ்' என்ற பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
2006ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் 2008ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து வெளியேறினேன்.
அதன் பிறகு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் வந்ததால், எனக்கும், எனது வீட்டுக்கும் தற்போது ஒய்' பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எனக்குத் தரப்பட்டுள்ள பாதுகாப்பை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் எனக்கு வருகின்றன. இந்த சூழ்நிலையில் அரசியல் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக, ஒய் பிளஸ்' பாதுகாப்பாக உயர்த்தி அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கோடை விடுமுறை காலத்தில் நடந்த விசாரணையில், ஜோதிக்கு தரப்பட்ட ஒய்' பாதுகாப்பை 10ம் தேதி வரை நீடித்து நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் உத்தரவிட்டு இருந்தார்.
இந் நிலையில் நீதிபதி பி.ஜோதிமணி முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஒரு நபருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கும் விவகாரத்தை, டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் மற்றும் எந்த சார்பும் அற்ற உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பாதுகாப்பு பரிசீலனை கமிட்டிதான் முடிவு செய்யும். இந்த கூட்டம் அவ்வப்போது நடத்தப்படும்.
கடந்த 2008ம் ஆண்டு தனக்கு மிரட்டல் வருவதாக திருமங்கலம் போலீசில் ஜோதி புகார் கொடுத்திருந்தார். அதன்பிறகு அவர் வேறு புகார் எதுவும் தரவுமில்லை, அவருக்கு மிரட்டல் இருப்பதாக தெரியவுமில்லை. இந்த நிலையில் உள்துறை செயலாளருக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பி ஒய் பிளஸ்' பாதுகாப்பு கேட்டுள்ளார். அதில் மிரட்டல் இருப்பதாக கூறியிருக்கிறாரே தவிர, எப்படிப்பட்ட மிரட்டல் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மே 20ம் தேதி பாதுகாப்பு பரிசீலனை கமிட்டி கூடியது. அதில் 35 பேருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தரத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் ஜோதி. இவருக்கு மட்டும் பாதுகாப்பு திருப்பிக் கொள்ள முடிவு செய்ததாக கூறுவது தவறானது. எனவே ஜோதியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கை நீதிபதி பி.ஜோதிமணி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை பாதுகாப்பு விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications