தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து 13ம் தேதி துவக்கம்

இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற 9 அடுக்கு கொண்ட பிரமாண்ட சொகுசு கப்பல் முதல் பயணத்துக்கு தயாராக உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா- இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்துள்ளன.
தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனைமத்தில் வைத்து அன்று மாலை 3 மணிக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் கப்பல் அமைச்சக அதிகாரிகள், துறைமுக பொறுப்பு கழக ஊழியர்கள், முக்கிய விருந்தினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி துறைமுக சபைத் தலைவர் சுப்பையா மற்றும் துறைமுக சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிக்கு ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. மும்பையை சேர்ந்த பிளமிங்கோ டூயூட்டி பெய்டு ஷாப் என்ற நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பயணிகள் ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகளை செய்ய உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்வுக்கு இந்த கப்பல் 12 மணியிலிருந்து 14 மணி நேரத்திற்குள் சென்று சேரும். தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்புவை சென்றடையும். கொழும்புவிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு கிளம்பும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications