பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கக் கோரி கரூர் பிரஸ் கில்டு பிரதமருக்கு தந்தி
கரூர்: இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரூர் பிரஸ் கில்டு சார்பில் தந்தி கொடுக்கப்பட்டது.
கரூர் பிரஸ் கில்டு அவசர கூட்டம் அதன் தலைமையகத்தில் செயலாளர் கே.என். வடிவேல் தலைமையில் நேற்று( 11-ம் தேதி) மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இதற்கு தினமலர் ஸ்காட் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்,
மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டரும், மூத்த நிருபருமான ஜே.டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்செயல் கடும் கண்டனதிற்கு உரியது.
பட்டப் பகலில் மும்பை போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்ட செய்தி கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உண்மையை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
பாத்திரிக்கையாளர்ளுக்கு பாதுகாப்பு வழங்குவது மத்திய அரசின் தலையாய கடமை என்றும், எனவே பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன் சிங் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிருபர்கள் இரத்தினம், ஆனந்த், சண்முகசுந்தரம், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தீர்மானத்தை முன்னிலைப்படுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரூர் பிரஸ் கில்டு சார்பில் தந்தி கொடுக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications