வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கண்ணாடி காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம தலைவர் எம்.எம். கத்காரி கூறுகையில், காணாமல் போன கண்ணாடி குறித்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பல இங்கு உள்ளன. அவை குறித்த பட்டியலும் எங்களிடம் உள்ளது. அதேசமயம், கண்ணாடி குறித்து அந்தப் பட்டியலில் குறிப்பிடாமல் விட்டு விட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
இதுவரை இதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் தரவில்லை என்றார் அவர். புகார் ஏதும் வரவில்லை என்பதை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். போலீஸ் புகார் கொடுக்காதது ஏன் என்று கத்காரியிடம் கேட்டால், ஆசிரம நிர்வாகிகள் கூடி முடிவெடுத்துதான் அதை தீர்மானிக்க முடியும் என்றார்.
நாக்பூரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த வார்தா ஆசிரமம். இங்கு 1936ம் ஆண்டு காந்தியடிகள் வருகை தந்தார். பின்னர் இங்கேயே தங்கினார். இந்த ஆசிரமத்திற்கு ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications