புதுவையில் ஒரு குழப்பமும் இல்லை, ஆட்சிக்கு ஆபத்து இல்லை: முதல்வர் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுவை அரசியலில் எந்த குழப்பமும் இல்லை, எனது ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சித்தர் கோவிலுக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்ய சென்றார்.
அங்கு அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தற்போது புதுச்சேரி அரசியலில் எந்த குழப்பமும் இல்லை. அரசியல் சூழ்நிலை நன்றாகவே உள்ளது. ஆட்சிக்கு அப்படி எந்த ஆபத்தும் இல்லை. ஆட்சி நிச்சயமாக நன்றாக நடக்கும்.
எந்தவித பிரச்சனையோ, குழப்பமோ இல்லை. நான் எங்கள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications