ஜெயலலிதா வீட்டுக்குள் புக முயன்ற மன நலம் பாதித்த பெண்
சென்னை முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் இரவில் ஒரு பெண் புக முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு ஒரு பெண் வந்தார். வந்தவர் நேராக வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர் தேனாம்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது பெயர் மேகலா என்றும் 21 வயதாவதாகவும், கணவர் தன்னைக் கைவிட்டு விட்டதாகவும், முதல்வரிடம் கூறினால் சேர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை காரணமாக வந்ததாகவும் கூறினார்.
அப்பெண்ணுக்கு மன நல பாதிப்பும் இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். விசாரணைக்குப் பின்னர் மேகலாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து பின்னர் மேகலாவை அவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் முதல்வர் வீட்டுப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications