For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டி.பி. ரியலிட்டியின் ரூ.214 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய சிபிஐ மும்முரம்!

By Shankar
Google Oneindia Tamil News

DB Realty
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஒரு பகுதியாக கைமாறியதாக சொல்லப்படும் ரூ 214 கோடிக்கு இணையான டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மும்முரமாகியுள்ளது சிபிஐ.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில், டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் மூலம் குசேகான் ஹெல்த்தி மற்றும் சினியுக் நிறுவனம் ஆகியவற்றின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி போய் சேர்ந்ததாக கூறப்பட்டு இருந்தது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பெற்ற ஆதாயத்துக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் அந்த குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.

ரூ 214 கோடிக்கு சொத்து பறிமுதல்

இந்த நிலையில், கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ரூ.214 கோடி எங்கே போனது, அந்தத் தொகையை சிபிஐ ஏன் கைப்பற்றவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எனவே, இந்த தொகைக்கு சமமான மதிப்புள்ள டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக அமலாக்கப் பிரிவுக்கு விரைவில் கடிதம் எழுத இருப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

சி.பி.ஐ. நிறுவனமே நேரடியாக சொத்துக்களை முடக்க முடியாது என்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு பணம் விதிமுறை மீறல் சட்டத்தின்படி, அமலாக்கப் பிரிவுதான் அந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதாலும் அந்த அமைப்புக்கு கடிதம் எழுத இருப்பதாக சி.பி.ஐ. கூறுகிறது.

English summary
he Central Bureau of Investigation (CBI) on Tuesday initiated the process of laying its hands on the Rs 200 crore that was allegedly used as a bribe in the 2G scam. On Monday, the Supreme Court had asked the agency to explain the whereabouts of the sum mentioned in the chargesheet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X