அல் கொய்தாவின் புதிய தலைவராக ஜவாஹிரி பொறுப்பேற்றார்-அல் கொய்தா

ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு அல் கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஜவாஹிரி ஏற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக அல் கொய்தா அமைப்பின் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
எகிப்தைச் சேர்ந்தவர் அல் ஜவாஹிரி. அல் கொய்தா அமைப்பின் முக்கியப் புள்ளி. பின்லேடனின் வலது கரமாக திகழ்ந்தவர். இந்த நிலையில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானில் வைத்துக் கொன்று விட்டனர். இதனால் அடுத்த தலைவராக ஜவாஹிரி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் வேறு ஒருவரை தலைவராக அறிவித்தது அல் கொய்தா. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பின்லேடன் உயிருடன் இருந்தபோதே அவனுக்கும், ஜவாஹிரிக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு ஜவாஹிரி விலகிப் போய் விட்டார் என்ற தகவல் பரவியது.
இந்தச் சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜவாஹிரியின் வீடியோ உரை ஒன்று வெளியாகியது. அதில், பின்லேடன் கொல்லப்பட்டதை ஒத்துக் கொண்ட ஜவாஹிரி, அதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லீ்ம்கள் பழிவாங்குவார்கள், அமெரிக்காவை அழிப்போம் என்று முழங்கியிருந்தார் ஜவாஹிரி.
இந்த நிலையில் ஜவாஹிரி அல் கொய்தாவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications