ஊழல் ஒழிப்பு தொடர்பான அமைச்சர்கள் குழு ஆலோசனை-அழகிரி பங்கேற்பு-ப.சி, சிபல் ஆப்சென்ட்!
டெல்லி: ஊழல் ஒழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருப்பினும் முக்கிய அமைச்சர்களான ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
ஊழலை ஒழிப்பது குறித்தும், அதில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில், ப.சிதம்பரம், சரத்பவார், ஏ.கே.அந்தோனி, எம்.வீரப்ப மொய்லி, கபில் சிபல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரியும் இதில் ஒரு உறுப்பினராக உள்ளார்.
இக்குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் சிதம்பரமும், கபில் சிபலும் வரவில்லை. இருவரும் லோக்பால் மசோதா தொடர்பான அன்னா ஹஸாரே குழுவினரின் புகார்களுக்கு விளக்கம் அளித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததால் கூட்டத்திற்கு வர முடியவில்லையாம்.
விரைவில் அமைச்சர்கள் குழு 7 முக்கிய அம்சங்கள் குறித்து அரசுக்குத் தனது பரி்நதுரையை அளிக்கவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications