வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்றால் போராட்டம்! - சீமான்

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.
21-வது ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று கண் காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படு கொலைப் போரில் 1 1/2 லட்சம் மக்களை கொன்று குவித்த அந்நாட்டு அரசு தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழ் மண்ணில் நடைபெறும் கண் காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாகும்.
எனவே சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையும் சென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் இந்த கண் காட்சியில் இடம் பெற செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
எங்களின் வேண்டுகோளையும் மீறி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்கு பெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications