தேவை குறைவால் முந்திரி விலை சரிவு
டெல்லி: தேவை குறைந்துள்ளதால் இன்று தலைநகர் டெல்லியில் முந்திரிப் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ. 5 குறைந்துள்ளது.
போதிய இருப்பு மற்றும் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.
முந்திரி கர்னல் (எண் 180, 210, 240 மற்றும் 230) விலை ரூ. 5 குறைந்து கிலோ ரூ. 645-665, ரூ. 595-620, ரூ. 545-570 மற்றும் ரூ. 495-545-க்கு விற்பனையானது.
சில்லறை வியாபாரிகள் மற்றும் ஸ்டாக்கிஸ்ட்கள் தேவை குறைந்துள்ளதாலும், போதிய அளவு இருப்பு உள்ளதாலும் தான் உலர் பழங்கள் மொத்த வியாபார சந்தையில் முந்திரி கர்னலின் விலை குறைய காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய டிரை ப்ரூட் விலை நிலவரம் (40 கிலோவுக்கு)
பாதாம்(கலிபோர்னியா) - ரூ. 10, 700
பாதாம் (குர்பான்டி- புதியது) - ரூ. 5, 100 - 5, 400
பாதாம் (கிர்தி) - ரூ. 2,800-3,000
அப்ஜோஷ் ஆப்கானி - ரூ. 7,000-20,000
பாதாம் கர்னல் (கலிபோர்னியா) - கிலோ ரூ. 380-390
பாதாம் கர்னல் (குர்பான்டி- புதியது) - கிலோ ரூ. 340-400


Click it and Unblock the Notifications
