மீண்டும் ரூ.17,000த்தைத் தாண்டியது தங்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் கரூ 17 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இன்று ஒரு சவரன் ரூ 17,040க்கு விற்பனையானது.
நேற்று மாலை ஒரு சவரன் ரூ.17 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இன்று ரூ.17,040-ஐத் தொட்டது.
கடந்த மாதம் 28-ந் தேதி அதிகபட்சமாக சவரன் ரூ.17,008 க்கு விற்கப்பட்டது.
அதன் பிறகு இந்த அளவு அதிக விலைக்கு தங்கம் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும். சர்வதேச சந்தையில் விலை உயர்வு, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைதல், தங்கத்தின் மீதான முதலீடு அதிகம் என தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.
அதேபோல, என்னதான் விலை உயர்ந்தாலும், தங்கம் வாங்குவதில் மக்களுக்குள்ள ஆர்வம் குறையவே இல்லை.
இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.58.50 ஆக விற்பனையானது.












Click it and Unblock the Notifications