'இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் பாகிஸ்தானே!..பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தல் இந்தியாவே'!

வாஷிங்டனை மையமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Centre) இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளி்ல் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. ஒவ்வொரு நாட்டு மக்களும் அண்டை நாட்டையும், அருகாமையில் உள்ள பிற நாடுகள் குறித்தும், அந் நாட்டு மக்கள் குறித்தும் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்த சர்வே நடத்தப்பட்டது.
அதில், தலிபான்கள், அல்-கொய்தா தீவிரவாதிகளை விட விட இந்தியர்களே பாகிஸ்தானுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்று 54 சதவீத பாகிஸ்தானியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 14 சதவீத பாகிஸ்தானியர்களே இந்தியாவுக்கு சாதகமாக உள்ளனர்.
இந்தியாவுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படுத்துவது பாகிஸ்தானே என்று 63 சதவீத இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் பற்றி இந்தியர்களிடம் கேட்டபோது 45 சதவீதத்தினர் பாகிஸ்தானையும், 19 சதவீதத்தினர் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஸ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பையும், 16 சதவீதத்தினர் உள்நாட்டு நக்சலைட்டுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இரு நாடுகளும் நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இரு நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு இரு நாட்டு தூதரக உறவுகள் தவிர வர்த்தக உறவை அதிகரிப்பதும் அவசியம் என்று இரு நாட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான மிகப் பெரிய பிரச்சனையாக இரு நாடுகளைச் சேர்ந்த மக்களில் 73 சதவீதம் பேர் நினைப்பது காஷ்மீர் விவகாரத்தைத் தான். காஷ்மீர் விவகாரமே மிகப் பெரிய பிரச்சனை என்று 80 சதவீத பாகிஸ்தானியர்களும், 66 சதவீத இந்தியர்களும் கூறியுள்ளனர்.
மேலும், பாகிஸ்தானியர்கள் அமெரிக்க படையினரால் பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டதை ஒரு கெட்ட நிகழ்வாகவே பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். 14 சதவீதம் பேர் மட்டுமே அவர் கொல்லப்பட்டதை ஆதரித்துள்ளனர்.
அதே போல அமெரிக்காவின் கொள்கைகள் இந்தியாவுக்கே சாதகமாக உள்ளதாக 52 சதவீத பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானிக்கு சாதகமாக உள்ளதாக வெறும் 9 சதவீத பாகிஸ்தானியர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அமெரிக்காவின் கொள்கைகள் நடுநிலையுடன் உள்ளதாக (இந்தியா-பாகிஸ்தானுக்கு பலனளிக்கும் வகையில்) 27 சதவீத இந்தியர்களும், இந்தியாவுக்கு சாதகமாக உள்ளதாக 29 சதவீத இந்தியர்களும், பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக 13 சதவீத இந்தியர்களும் கூறியுள்ளனர்.
சீனாவிலும் இந்திய எதிர்ப்புணர்வு...
அதே போல இந்த மையம் சீனாவிலும் இதே போன்ற கருத்துக் கணிப்பை நடத்தியதில் அந் நாட்டு மக்களில் 53 சதவீதம் பேர் இந்தியாவுக்கு எதிரான கருத்தையே கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவை நேசிக்கும் இந்தோனேஷிய, ஜப்பான் மக்கள்:
அதே நேரத்தில் பெரும்பான்மையான இஸ்லாமியர்களைக் கொண்ட இந்தேனேஷியாவைச் சேர்ந்த மக்களில் 61 சதவீதம் பேரும், 59 சதவீத ஜப்பான் மக்களும் இந்தியா குறித்தும் இந்திய மக்கள் குறித்தும் மிக நல்ல எண்ணம் கொண்டுள்ளனர்.
அமெரிக்கா-இந்தியா உறவு:
அமெரிக்கா-இந்தியா இடையிலான நட்புறவு பலமடங்கு அதிகரித்துள்ளதாக 46 சதவீத இந்தியர்களும், 46 சதவீத பாகிஸ்தானியர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications