சட்டசபை தேர்தல் செலவுகள்-அடக்கி வாசித்த நெல்லை வேட்பாளர்கள்
நெல்லை: சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் வேட்பாளர்களின் செலவு கணக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ரூ.16 லட்சம் செலவு செய்ய அனுமதி இருந்த போதும் ரூ.10 லட்சத்தை தாண்டி ஒரு வேட்பாளர் மட்டுமே செலவு செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப் 13ம்தேதி நடந்தது. வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை ஜூன் 13ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒவ்வொரு வேட்பாளரும் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கு விபரத்தை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் செலவு கணக்கு காட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பை, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 9 பேரின் செலவு கணக்கு ரூ.10 லட்சத்தை கூட தாண்டவில்லை. ரூ.10 லட்சத்தை தாண்டி செலவு செய்தது ராதாபுரம் தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் மட்டுமே.
வெற்றி பெறறவர்களில் மிக குறைவாக செலவு செய்தவர்கள் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். தோல்வி அடைந்தவர்களில் அதிக செலவு செய்தவர் நாங்குநேரி வேட்பாளர் வசந்தகுமார். குறைவாக செலவு செய்தவர் அம்பை திமுக வேட்பாளர் ஆவுடையப்பன்.












Click it and Unblock the Notifications