சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது! - சீமானுக்கு விளக்கம்
சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் வீட்டு உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் இடம்பெறாது, என்று கண்காட்சியை நடத்துபவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தக் கண்காட்சியில் நடைபெறும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் என அறிவித்திருந்தனர்.
இதில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களை அனுமதிப்பது தமிழக சட்டப் பேரவை தீர்மானத்தையும், தமிழக மக்களின் உணர்வு களையும் அவமதிப்பதாகும்", சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து அந்தக் கண்காட்சியை நடத்தும் சையது ஜாகிர் அகமது என்பவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை வீட்டு உள் அலங்காரப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியை நடத்த உள்ளோம்.
இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களோ அல்லது இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களோ நிச்சயம் இடம் பெறவில்லை. இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த பொருளும், தயாரிப்பாளரின் நேர்முகமான அல்லது மறைமுகமான தொடர்பும் இல்லை.
எங்களுடைய நிறுவனத்தின் தகவல் ஏடுகளில் காணப்படும் தகவல்கள் ஏதேனும் தமிழர் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்", என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications