புதுச்சேரி: 3 எம்எல்ஏக்களை 'நியமித்து' மெஜாரிட்டியை நிரூபிக்க ரங்கசாமி திட்டம்?

புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.கவும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்- அதிமுக கூட்டணி 20 இடங்களைக் கைப்பற்றியது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கைப்பற்றியது.
இதில் முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் இந்திரா நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 14 ஆகக் குறைந்துவிட்டது.
ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்ற நிலையில் அதிமுகவை கழற்றிவிட்ட ரங்கசாமி சுயேட்சை எம்.எல்.ஏ. ஆதரவுடன் தனித்தே ஆட்சியமைத்தார்.
ஆனால், அதற்கு மேல் நகர முடியாமல் தவிக்கிறார். என்.ஆர்.காங்கிரசும் எதிர்க் கட்சிகளும் சம பலத்தில் இருப்பதால் சபாநாயகரை தேர்வு செய்யவோ, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கவோ முடியாமல் தவித்து வருகிறார்.
சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏற்பட்டாலோ, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்தாலோ அது ஆளும் தரப்புக்கு எதிராகப் போகலாம், இதனால் ரங்கசாமியின் ஆட்சிக்கே ஆபத்து வரலாம்.
அதோடு அமைச்சர் பதவி கிடைக்காத என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது (இவர்கள் அடிப்படையில் காங்கிரஸ்காரர்கள் தான், காங்கிரஸ் கலாச்சாரத்தை கட்சியை விட்டு போனாலும் தொடர்ந்து கடைபிடிக்கின்றனர்). இந்த சூழலில் சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏற்பட்டால் ஆளும் தரப்புக்கு சாதகமற்ற நிலை ஏற்படலாம். இது ரங்கசாமியின் ஆட்சிக்கே ஆபத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.
இந் நிலையில் இனிமேல் அதிமுகவிடம் போக முடியாது என்பதால் ஆட்சியில் தொடர, தான் முன்பிருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இது குறித்துப் பேச டெல்லி சென்ற ரங்கசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது தனது அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு சோனியாவிடம் ரங்கசாமி கோரினார். இது குறித்து புதுவை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்துடன் ஆலோசிக்குமாறு சோனியா கூறியதோடு, என்.ஆர்.காங்கிரஸை காங்கிரசுடன் இணைத்துவிட்டு நிம்மதியாக ஆட்சி நடத்துமாறு அட்வைஸ் தந்ததாகவும் தெரிகிறது.
சோனியாவை சந்தித்த பின் நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், வாழ்த்து பெற்றதாகவும் மட்டும் தெரிவித்தார். அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டீர்களா? என்ற கேள்விக்கு ரங்கசாமி பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து ரங்கசாமி இன்றும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார்.
இன்று அவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசிவிட்டு புதுவை திரும்ப உள்ளார்.
இந் நிலையில் சோனியா காந்தியை ரங்கசாமி சந்தித்திருப்பது புதுவை காங்கிராரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் முதல்வராக இருந்த ரங்கசாமியை அமைச்சர்கள் ஒன்றிணைந்து எதிர்த்து அவர் பதவி விலக காரணமாக இருந்தனர்.
ஆனால், ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் ரங்கசாமி மீண்டும் காங்கிரசுக்குள் வந்தால் தங்களுக்கு பாதிப்பு நிச்சயம் என இந்த காங்கிரசார் கருதுகின்றனர்.
ரங்கசாமிக்கு எதிராக ஆளுநரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு:
இந் நிலையில் புதுவை மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், புருஷோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் இன்று கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில்,
புதுவையில் மேலவை இல்லாததால் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்தி 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க ரங்கசாமி முயற்சித்து வருகிறார்.
தற்போது ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர். எனவே போதிய மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சியில் இருக்கிறார். 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்து மெஜாரிட்டியை நிரூபிக்கலாம் என்று அவர் கருதுகிறார். மேலும் சபாநாயகர் தேர்தல் உள்ளிட்ட விஷயங்களிலும் நியமன எம்.எல்.ஏக்களை பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
எனவே, நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதற்கு கவர்னர் அனுமதிக்க கூடாது. இதற்கு முன்பு 5 தடவை நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்காமலேயே ஆட்சிகள் நடந்துள்ளன. அதே போல நியமன எம்.எல்.ஏக்கள் இல்லாமலேயே ஆட்சியை தொடர வேண்டும்.
புதுவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே இதை வரையறுத்து விட்டு தான் இது சம்மந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மெஜாரிட்டியை இழந்துள்ள புதுவை அரசு சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். நியமன எம்.எல்.ஏக்களுக்கு அரசுக்கு ஆலோசனை கூறும் உரிமை மட்டுமே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications