எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் தேடப்பட்ட புவனா அபுதாபியில் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த புவனா அபுதாபியில் சிக்கியுள்ளார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன். இவர் கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். குடும்பப் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக விஜயனின் உறவுப் பெண்ணான பானு சிக்கினார். அவர் நடத்தி வந்த பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த புவனாவுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்யத் தேடினர். ஆனால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டார்.

அவர் அபுதாபியில் இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து இன்டர்போல் உதவியுடன் புவனாவைப் பிடிக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது புவான கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விரைவில் சென்னைக்குக் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+